சேலம் - சென்னை 8 வழி பசுமை வழி சாலை திட்டத்திற்கு 6 ஆவது நாளாக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் -சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம், 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. இதனிடையே நிலம் அளவீடு செய்யும் பணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே 6வது நாளாக நடைபெற்ற நிலம் அளவீடு செய்யும் பணியில் நிலவராப்பட்டி, எருமாபாளையம், பனங்காடு பகுதியில் எல்லைக்கற்கள் நடும் பணி நடந்தது. கெஜல்நாயக்கன்பட்டி, ராஜாஜி காலனியில் உள்ள பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு குடியிருப்பு பகுதிகளில் நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV