புதுச்சேரியில் பிடிபட்ட 140 கிலோ எடை கொண்ட பால்சுறா மீன் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
60 நாள் மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன்பிடித்தொழிலை புதுச்சேரி மீனவர்கள் கடந்த வாரம் துவங்கினர். இந்த நிலையில் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களின வலையில் மத்தி, கவலை, சூறை ஆகிய மீன்கள் அதிக அளவில் கிடைத்ததாகவும், இவற்றை கேரள மக்கள் அதிக அளவில் சாப்பிடுவதால் அந்த மீன்கள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டன. இதேபோல் ஒரு வலையில் 140 கிலோ எடை கொண்ட பால்சுறா கிடைத்தது, இந்நிலையில் மீன் கரைக்கு கொண்டு வரப்பட்ட போது ஏராளமானோர் மீனை வாங்க போட்டி போட்டனர். இதனை தொடர்ந்து இந்த மீன் 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV