பொன்ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோவில் நக்சலைட்டுக்கு ஆதரவாக பேசியிருப்பவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவராக இருக்கமாட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பயங்கரவாதிகள், நக்சல்கள் ஊடுருவி இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசி வருகிறார், ஆனால் அமைச்சர் வேலுமணி உட்பட தமிழக அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர். இதில் யார் சொல்வதை நம்புவது? தேவையற்ற இது போன்ற கருத்தை அவர்கள் பரப்புவதாக குற்றம் சாட்டினார். கோவையில் தண்ணீர் விநியோகம் பிரான்ஸ் நாட்டிற்கு கொடுத்து இருப்பதில் வியப்பில்லை என்று தெரிவித்த சீமான், தமிழர்களின் உரிமையை காக்க மத்திய அரசு எப்போதும் துணை நின்றதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பல்வேறு திட்டங்களால் விளைநிலத்தை பிடுங்கி நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுகின்றனர் என்றார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV