நாமக்கல்லில் கடந்த 22ம் தேதி ஆய்வு செய்ய சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட ஆயிரத்து 111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் ஆளுநர் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும், இது தமிழக அரசுக்கு எதிரான ஆய்வு கிடையாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது எனவும், ஆளுநருக்கு எங்கு வேண்டுமானாலும் செல்லும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஆளுநர் மாளிகை, ஆளுநருக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV