சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால் அநாட்டு பெண்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV