அருணாசலப்பிரதேச மாநிலம் பாபும்பரே மாவட்டத்தில் உள்ள டோனில் காலனி பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு மழை பெய்து வரும் நிலையில், அப்போது அங்கு கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 5 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், அவர்கள் அனைவரும் அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV