தமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி ரம்ஜான் பண்டிகையை தொடர்ந்து சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 10 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும் எனவும், அதனை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம், போராடியவர்கள் மீது வழக்கு பதிவு உள்ளிட்ட விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நீதிமன்றமே அரசாணை குறித்து சந்தேகம் எழுப்பியது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு, ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது மற்றும் வழக்கு பதிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்விகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV