கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணையில் திறக்கப்படும் தண்ணீர் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், நேற்று ஆயிரத்து 600 கனஅடி வீதம் நீர்வரத்து காணப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல் சவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV