Surprise Me!

விஐபி நிலங்களில் அளவீடு பணி நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

2018-07-17 1 Dailymotion

சேலம் - சென்னை இடையில் 277 கிலே மீட்டருக்கு எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக, சேலம் மாவட்டத்தில், 29 கிராமங்களில், 36.3 கிலோ மீட்டருக்கு நிலம் அளவிடும் பணிகள், 18 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

இன்று பாரப்பட்டி துவங்கி, பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரை, 2.86 கிலோமீட்டருக்கு அளவிடும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இன்று, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, அவரின் சகோதரி ஓய்வு பெற்ற, டி.ஆர்.ஓ., சாந்தா, தினகரன் கட்சியின், புறநகர் மாவட்ட செயலர், எஸ்.கே.செல்வம் ஆகியோரின் நிலங்களில் அளவிடும் பணிகள் நடக்கின்றன.

வி.ஐ.பி.,க்களின் நிலங்கள் என்பதால், எதிர்ப்புகள், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டடுள்ளது. மேலும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமலிருக்கவும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon