அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் அடைக்கப்பட்டுள்ள முகாமுக்கு சென்ற டிரம்ப் மனைவி அணிந்திருந்த ஆடையில் பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளின் குழந்தைகளை தனியாக பிரித்து அடைத்து வைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை டிரம்ப் கொண்டு வந்தார். ஐ.நா உள்ளிட்ட பல நாடுகள் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் கூட இந்த நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இதனை அடுத்து, பெற்றோர் - குழந்தைகளை பிரிக்கும் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள குழந்தைகள் முகாமை அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் பார்வையிட்டார். அப்போது, பச்சை நிற கோட் ஒன்றை அணிந்திருந்தார். அதில், I really dont care, do u என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மெலானியாவின் செய்தி தொடர்பாளர், இதில் எந்த உள் அர்த்தமும் இல்லை என விளக்கமளித்துள்ளார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV