தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகள் எதுவும் செய்யவில்லை என, பாஜக தேசிய இளைஞரணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பூனம் மகாஜன் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மற்றும், இளைஞரணி சார்பில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய இளைஞரணி தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பூனம் மகாஜன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜான் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பூனம் மகாஜன், தற்போது நாடு முழுவதும் நடிகர்கள் நான் தான் சூப்பர் ஸ்டார் என்றாலும் மக்களுக்காக பணியாற்றி வரும் நமது பிரதமர் நரேந்திர மோடிதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார்.
Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV