Surprise Me!

காவல் நிலையத்திற்கு நுழைந்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ஒருவர் கைது

2018-07-17 6 Dailymotion

சென்னையில் பத்திரிகையாளர் என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு நுழைந்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கி காயப்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கோபிநாத் என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரு பிரிவினருக்கிடையேயான கந்துவட்டி பிரச்சனையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கந்துவட்டி கும்பலால் கடத்தப்பட்ட கார் ஒன்றை உதவி ஆய்வாளர் கோபிநாத் மீட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் என்பவர் பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு கோபிநாத்தை மிரட்டியுள்ளார். மேலும் அவதூராக செய்தி வெளியிட்டிருவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலி பத்திரிகையாளர் அன்பழகன் 3 பேருடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் கோபிநாதை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் கோபிநாத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலி பத்திரிகையாளர் அன்பழகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் விமலேஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon