நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி 'சிந்தன் ஷிபிர்' என்னும் இருநாள் ஆலோசனை கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய செயலாளர் வி.சத்தீஷ், குஜராத் மாநில பொறுப்பாளர் புபேந்திரா யாதவ், உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் பணிக்குழுக்களை அமைப்பது தொடர்பாகவும், இதர பிரசார ஏற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV