Surprise Me!

மலைப்பகுதிகளில் அம்மா மருந்தகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - செல்லூர் ராஜு

2018-07-17 0 Dailymotion

10 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் செய்தி, விளம்பரம், சுற்றுலா, கலை, பண்பாடு உள்ளிட்டவைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, கேள்வி நேரத்தின்போது வால்பாறை மற்றும் ஆணை மலையிலும் அம்மா மருந்தகம் அமைக்கக்கோரி வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கோரிக்கை வைத்தார். இதேபோல், மலைப் பிரதேசங்களில் அம்மா மருந்தகங்களை அமைக்க அரசு முன்வர வேண்டும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மலைப்பகுதிகளில் அம்மா மருந்தகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், தமிழகத்தில் தற்போது 111 அம்மா மருந்தகங்கள் இயங்கி வருவதாகவும் இதன் மூலம் தற்போது வரை 700 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon