தமிழகத்தில், மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொள்ளும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறித்து சட்டப்பேரவையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேச முற்பட்டார். அப்போது, குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், சட்டவிதிகளின் படி, சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்து பேச அனுமதியில்லை என்றும், ஆளுநர் குறித்து பேசினால் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஆளுநர் குறித்து பேச அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். பின்னர், ஆளுநர் ஆய்வு குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV