திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட லாரிகளை, சிறைப்பிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியே ஸ்தம்பித்தது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த தத்தமஞ்சி, நெய்தவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில், விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் மணல் அள்ளுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதுகுறித்து, வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த நெய்தவாயல் பகுதி விவசாயிகள், அவ்வழியாக மண் ஏற்றிவந்த 100- க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV