செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி மற்றும் அசாவீரன்குடிக்காடு கிராமங்களில் ஓஎன்ஜிசி யின் சமுதாய வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்தது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவிற்காக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கூடாது என்றும், குடிநீரை இலவசமாக கொடுத்து மீத்தேன் எரிவாயு எடுக்க போர்வெல் அமைக்க முன்னோடி திட்டமாக இது உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவை கைவிட்டு சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில், பரபரப்பான சூழல் நிலவியது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV