ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன். மீனவரான இவர் நேற்று தனது வீட்டுக்கு செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டியுள்ளார். சுமார் 5 அடிகள் தோண்டியதும் அந்த பள்ளத்தில் இருந்து பழைய தோட்டாக்கள் பெட்டி பெட்டியாக கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர். போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழியை மேலும் தோண்டியதில் பல்வேறு வகையான பழைய தோட்டாக்கள் கிடைத்தது.
8 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், 400 உயர்தர மெஷின்கள், இரண்டு சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள், 5 கையெறி குண்டுகள், 5 கன்னிவெடிகள் தடை செய்யப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த ஆயுத குவியல்,15 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் இவற்றை தடயவியல் துறைக்கு அனுப்ப உள்ளதாகவும், பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV