மஹாராஷ்ட்ராவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 10-ம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே பருவமழை தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மும்பையின் பல பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் நகரமே ஸ்தம்பித்துள்ளது. மும்பையின் தானே பகுதியில் கனமழை பெய்த போது மரம் விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இதே போல் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 வயது சிறுவன் ஒருவரும் உயிரிழந்தார். பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV