சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா. இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட இவர், தனது 9-வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார். இந்நிலையில், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் என்றும், இது உண்மையான சாதனை எனவும் பதிவிட்டுள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV