Surprise Me!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய தினம் நான்கு ஆட்டங்கள் நடைபெற உள்ளன

2018-07-17 0 Dailymotion

இன்று இரவு 7.30 மணிக்கு பிஸ்ட் ஸ்டேடிடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் c பிரிவில் உள்ள அஸ்திரேலிய அணி பெரு அணியுடன் மோதுகிறது. இந்த பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இந்த பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பது இன்று தெரியவரும். c பிரிவில் நடக்கும் மற்றோரு ஆட்டத்தில் டென்மார்க் பிரான்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிக்கு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரவு11.30 மணிக்கு நடக்கும் d பிரிவு ஆட்டத்தில் நைஜீரியா , அர்ஜென்டீனா அணிகள் மோதுகின்றன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி முதல் இரண்டு ஆட்டங்களில் சோதப்பிய நிலையில், இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதேபோன்று மற்றோரு ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள ஐஸ்லாந்து, குரோஷியா அணிகள் மோதுகின்றன.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon