மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் மின்னல் தாக்கி பலியாகினர். பலத்த மழையால் ரெயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டதால் கிழக்கு ரெயில்வே மற்றும் தென் கிழக்கு ரெயில்வே சார்பில் இயங்கும் ரெயில்கள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகம் மற்றும் பள்ளி செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV