Surprise Me!

திருமணம் நடந்து 90 நாட்களே ஆன பெண் தற்கொலை

2018-07-17 0 Dailymotion

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையம் பகுதியில் வசிப்பவர் சதீஷ்வரன். இவரும், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஜனனி என்பவரும் கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், ஜனனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலின் அடிப்படையில் போலிசார் ஜனனியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நடைபெற்று 90 நாட்களே ஆன பட்டதாரி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் ஜனனியின் உறவினர்கள், ஜனனியின் உடற்கூறு ஆய்வுக்கு பின் உடலில் சந்தேகத்திற்க்கிடமாக பல இடங்களில் காயங்கள் உள்ளதால் அவரது கணவர் சதீஷை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon