உலக கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து அணி கோல் அடித்த போது கிரானிட் ஷக்கா மற்றும் ஷகிரி ஆகியோர் அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டினர்.

அல்பேனியாவுடன் சீரான உறவு இல்லாத செர்பியாவுக்கு சுவிட்சர்லாந்து வீரர்களின் செயல் ஆத்திரமூட்டியது. இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனம் இருவருக்கும் 6.75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதே போல் செர்பியா கால்பந்து சங்க தலைவர், அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV