காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருவில் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக உறுப்பினர் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, காவிரி ஆணையத்தின் கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலர் ராகேஷ் சிங் நியமிக்கப்பட்டார். காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடகா உறுப்பினராக பிரச்சன்னா நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக அடுத்த 3 நாட்களுக்குள் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் கர்நாடக மாநில எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் எனவும் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV