சட்டப்பேரவையில் 110 விதியின் சுகாதாரத்துறையில் பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டார். அதன்படி, 985 மருத்துவ துணை சுகாதார மையங்கள், 82 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த சுகாதார மையங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும், மதுரை, கோவை, நெல்லை அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு 22 கோடி ரூபாய் செலவில் ஸ்கேன் கருவி வாங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மேலும், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 55.5 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக 3 தளங்கள் கட்டப்படும் என்றும் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 தளங்கள் கூடுதலாக கட்டப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV