பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்களில் மகளிருக்கு எதிரான நிலைப்பாடு, இளம் பெண்கள், சிறுமிகள் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சர்வதேச செய்தி நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவனம், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள 10 நாடுகளின் பட்டியலை கருத்துக் கேட்பின் அடிப்படையில் வெளியிட்டது.193 ஐ.நா. உறுப்பினர்கள் உள்ளிட்ட 550 நிபுணர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே அடிப்படையில் 2018-ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2011ம் ஆண்டில் பெண்களுக்கு ஆபத்து மிக்க நாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா 4ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV