புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில், சர்வதேச போதை பொருள் எதிர்ப்புதினம் அனுசரிக்கப்பட்டது. இதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு துறை அதிகாரிகள், போதை பொருளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். மேலும் இந்திய சுங்க மற்றும் சுங்கவரி சேவை அதிகாரி வெங்கடேஷ் பாபு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், ஒரு தடவை உபயோகித்தால் மீண்டும் மீண்டும் உபயோகிக்க தூண்டும் போதை பொருளை நமது வாழ்வில் கொண்டு வர கூடாது என்று கேட்டுக்கொண்டார். போதை பொருட்கள், மதுவை விட மோசமானது என்றும், எனவே போதை பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்று இளைஞர்கள் முடிவெடுத்தால் போதை பொருட்களை ஒழித்துவிடலாம் என்றும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV