Surprise Me!

பட்டாசு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை

2018-07-17 0 Dailymotion

திருவள்ளூர் மாவட்டம், எலாவூர் கிராமத்தில் பட்டாசுக்கடை வைத்திருப்பவர் அல்லாபக்கர். இவர், நேற்று தமது குடும்பத்தாருடன் அருகில் கட்டப்பட்டுள்ள தமது புதிய வீட்டில் உறங்கியுள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்த அல்லாபக்கர், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலையடுத்து, அங்கு வந்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 50 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon