சென்ட்ரல் ரயில் நிலையங்களில் செல்போன்கள் திருட்டு போவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் அதிக அளவில் வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து ரயில்வே போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரயில் நிலையத்தை சுற்றி திரிந்த இரண்டு பேரை ரயில்வே போலீசார் விசாரித்த போது, அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV