18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், இந்த18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது. இதனிடையே எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்தனர். ஒரேயொரு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனடிப்படையில் 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை வரவுள்ளது. தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV