இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் அயர்லாந்து, இங்கிலாந்து நாடுகளில் டி 20, 50 ஓவர் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அயர்லாந்து நாட்டுடன் முதலில் இரு போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடக்கவுள்ளது. முதல் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் கேப்டன் கோலி, தோனி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், கே.எல்.ராகுல், உள்பட முழுமையான இந்திய அணி களமிறங்குகிறது. அயர்லாந்துடன் கடந்த 2009 டி 20 உலகக் கோப்பையில் நடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றிருந்தது. இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ளும் வகையில் அயர்லாந்து சுற்றுப் பயணம் அமையும் எனக் கருதப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV