மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த அபிப் ரகுமான் என்பவர் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கருத்து மோதல் காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ரகுமானின் வீடு உள்தாழ் போட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்து, சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது ரகுமானும் அவரது இரண்டு குழந்தைகளும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில், மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டிருக்கலாம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV