ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய ஒப்புதல் வழங்கியதில், விதிமீறல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில், காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோருக்கு, தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும், அமலாக்கத்துறை அதிகாரி, ராஜேஷ்வர் சிங், சரியான முறையில் விசாரிக்கவில்லை என்றும், அவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், ரஜ்னீஷ் கபுர் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், தன்னையும் ஒரு வாதியாக சேர்க்கக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான, சுப்பிரமணியன் சாமி, மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.கே.மிஸ்ரா மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியார் அடங்கிய, விடுமுறை கால அமர்வு, சுப்பிரமணியன் சாமியின் மனுவை, நேற்று விசாரித்தது. இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV