மத்திய அரசு கொண்டு வர உள்ள அணை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அணை பாதுகாப்பு வரைவு மசோதாவால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் எனவும். எனவே மாநிலங்களை கலந்தாலோசித்து, மாநிலங்களின் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், மத்திய அரசு, அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். கடித்தத்துடன் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV