சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும், சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டு சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பரபரப்பு தகவலை தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக டிடிவி தினகரனின் ஆதரவாளரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV