ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை முடக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த போராட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கொள்கை விளக்கக் குறிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடைபெறுகிறது என்றும் நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15% தமிழகத்தில் நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது. போராட்டத்தை கட்டுப்படுத்த மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் லத்தி தாக்குதலும், கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV