சர்வதேச போதை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புதுச்சேரி, அரியாங்குப்பம் பாரத மாதா போதை மீட்பு மையம் சார்பில் போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு செவிலியர் கல்லூரி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவ -மாணவிகள் போதை எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV