கரும்புச்சாற்றில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்த பின்னர் துணைப்பொருளாக கிடைக்கும் 'மொலாசஸ்' மூலம் எத்தனால் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த நிலையில், சி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனால் ஒரு லிட்டர் விலையை 2.85 காசுகளுக்கு மத்திய அரசு உயர்த்தியது. இதன் மூலம் எத்தனால் விலை 43.70 காசுகளாக உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறையாக பி-மொலாசஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற எத்தனாலுக்கும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த முடிவுகள், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டன. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்து உள்ள பாக்கித்தொகையை வழங்குவதற்கும், எத்தனால் தாராளமாக கிடைக்கச் செய்வதற்கும், கரும்புச்சாற்றில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV