Surprise Me!

ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது

2018-07-17 0 Dailymotion

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகனான சிவமூர்த்தி திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தார். சிவமூர்த்திக்கு, அவருடன் பணி புரியும் மூர்த்தி என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவமூர்த்தியை சொகுசு காருடன் கடத்திய மூர்த்தி தமது நண்பர்களான மணிமாறன், கெளதமன் ஆகியோரின் சென்று சென்னை, கோவை என பல இடங்களில் சுற்றியுள்ளனர் பின்னர் மேட்டுபாளையத்தில் சிவமூர்த்தியை கொலை செய்து விட்டு, அங்குள்ள ஒரு ஏரியில் சிவமூர்த்தியின் சடலத்தை வீசியதாக தெரிகிறது. இந்நிலையில், பல இடங்களில் சிவமூர்த்தியின் காரில் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலையில் வெங்கிலி என்ற இடத்தில் சுற்றிதிரிந்துள்ளனர். அங்கு ரோந்து வந்த போலீசாருக்கு அவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அவர்களை காருடன் மடக்கி பிடித்த போலீசார், காரில் இருந்த மணிபாரதி,விமல்,கொதமன் ஆகிய மூன்று பேரையும் பிடித்து ஆம்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாணை நடத்தினர். அப்போது, அவர்கள் சிவமூர்த்தியை கொலை செய்து ஓசூரில் உள்ள ஒரு ஏரியில் சடலத்தை வீசியதாக கூறியுள்ளனர். பின்னர் மேலும் அவர்களிடம் விசாரணை நடத்த அவர்கள் மூன்று பேரையும் சடலம் வீசிய இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.தலைமறைவாக உள்ள மூர்த்தியை போலிசார் தேடி வருகின்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon