நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியால் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் மொழி பெயர்ப்பில் பல வினாக்களில் குளறுபடிகள் இருந்ததாகவும் அதே வினாத்தாளை ஆங்கிலத்திலிருந்து மராட்டி, இந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கும் போது குளறுபடிகள் இல்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழ் மொழி பெயர்ப்பு பிழையினால் தான் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என மனுதாரர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இதனையடுத்து நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலை வெளியிடுவதற்கு ஏன் இடைக்காலத் தடை விதிக்கக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மொழி பெயர்ப்பில் சில தவறுகள் இருக்கத்தான் செய்யும் என்றும் நீட் தேர்வு தர வரிசைப் பட்டியலை தற்போதைக்கு உடனடியாக அரசு வெளியிடாது என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV