ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டச் சுற்றுப்புறச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார், அந்த கடிதத்தின் நகலை வைகோவுக்கும் தமிழக அரசு அனுப்பியுள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்கக்கோரி அளித்திருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக் கூடாது என, ஏப்ரல் 12-ம் தேதி ஆணை பிறப்பித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 24-ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்றும், பின்னர் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, மே 28-ம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV