சென்னை பட்டினபாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதிக்கு அரசுத்தரப்பில் இருந்து இதுவரை ஏன் யாரும் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்த கடல் அரிப்பிற்கு உள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆய்வறிக்கை கிடைத்தவுடன் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், விரைவில் பட்டினப்பாக்கம் பகுதிக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். ராமநாதபுரம் தங்கச்சி மடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள துப்பாக்கி தோட்டாக்கள் மிகவும் பழமையானது என்று தெரியவந்துள்ளதாகவும், சட்டப்பேரவை நடந்துகொண்டிருப்பதால் முதலமைச்சர் விரைவில் உரிய பதிலளிப்பார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV