Surprise Me!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி : தென் கொரியாவிடம் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி

2018-07-17 1 Dailymotion

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி, கொரியா குடியரசை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி களமிறங்கியது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்த நிலையில், கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங்வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் ஜெர்மனி அணி கோல்கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜெர்மனி அணி மேற்கொண்டு கோல் அடிக்காததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் 'எஃப்' பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது. ஜெர்மனி அணி 80 ஆண்டுகளுக்குப் பிறகு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது குறிப்பிடத்தக்கது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon