புதுச்சேரி மாநிலம் அருகே உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 60 ஆண்டுகளுக்கு முன் தரமான குடிநீர் கிடைத்ததாகவும், தற்போது சுண்ணாம்பு படிமம் கலந்து வரும் குடிநீரால் புதிய புதிய நோய்கள் வருவதாகவும் மூத்த குடிமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆயிரம் குடும்பங்கள் வசிக்க கூடிய ஒரு கிராமத்தின் பிரச்சனை குறித்து கிராம அதிகாரி முதல் ஆளுநர் வரை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கடுமையாக குற்றம்சாட்டினர். மாநிலத்தை சுற்றியுள்ள சங்கராபரணி, ஊசுட்டேரி, வெள்ளேரி என இந்த கிராமத்தை சுற்றி நடைபெற்ற மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் 40 அடியில் இருந்து 600 அடிக்கு சென்று விட்டதாக அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவித்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV