திருவாரூர் மாவட்டம், சிட்டிலிங்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. மிகச்சிறிய கிராமமான சிட்டிலிங்கத்தில் அமைந்துள்ள இந்த பள்ளியில், இந்த ஆண்டு தொடக்கத்தில் 7 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளி மூடப்பட்டு விடக்கூடாது என கருதி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரிகளுடன் கிராமத்திற்கு சென்று மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க பெற்றோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் தனியார் ஆங்கில வழிகல்வியில் படித்து வந்த மாணவ-மாணவிகள் மூன்று பேரை சிட்டிலிங்கம் அரசுப்பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் சம்மதித்தனர். பள்ளியில் சேர்ந்த மூன்று மாணவர்களையும் கல்வி அதிகாரிகள் பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மேள தாளத்துடன் அழைத்து வந்தனர். மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரடியாக வந்து, மாணவர் சேர்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த இச்சம்பவம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV