சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, சட்டத்தில் உள்ள பிரிவிகள் மற்றும் விதிகள் குறித்து அனைவரும் அறிந்துக்கொள்ளும் வகையில் பள்ளி பாடத்தில் சட்டம் பற்றிய பாடம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதே போல் திமுக சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, தமது தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பகுதிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்பது போல் எதிர்கட்சி தொகுதிகளையும் தங்கள் தொகுதியாக கருதி வளர்ச்சி பணிகளை அரசு மேற்கொள்கிறது என கூறினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV