சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். தமிழக அரசு இவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்களையும், போராட்டக்காரர்களையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர் .ஆனால் நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த சாலைக்கு எதிராக தற்போது சட்டப்போராட்டமும் தொடங்கியுள்ளது. சேலம் 8 வழிச்சாலைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் அனுமதியின்றி சாலை போடப்படுகிறது என்றும், இந்த சாலையால் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மிகவும் குறைந்த பட்ச பணமே கொடுக்கப்படுவதாகவும், மக்களை மிரட்டி நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து ஜூலை 12 ஆம் தேதிக்குள் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க ஆணையிட்டுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV