திருவண்ணமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார கிராமங்களில் குறிப்பாக மண்மலை, செ.நாச்சிபட்டு போன்ற பகுதிகளில் எட்டு வழி பசுமை சாலைக்காக நிலம் கையகபடுத்துவதை எதிர்த்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மண்மலை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள கரும்பு தோட்டத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு அங்கு வந்துள்ளார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் டில்லிபாபுவை தாக்கியும், அவமரியாதையாக திட்டியும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக அப்பழுக்கற்ற முறையில் மக்களுக்காக பணியாற்றிய டில்லிபாபுவை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல் துணை கண்காணிப் பாளர் சுந்தர மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV