கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜவீதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றார். சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் ஆய்வு செய்ததில் 750 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர். போதை பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டது? விற்பனைக்காக எங்கு கொண்டு செல்ல உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV